ஒவ்வொரு சூரிய நாளிலும் சுடச்சுட : Updated Every Sunday
 
படைப்புகளை அனுப்ப...articles@prabandham.com sriram@prabandham.com

கைத்தலம் பற்றும் கல்யாணமேடை  வாரணமாயிரம்

வைணவம் சமயம் தொடர்பான தளங்களின் தொடர்புகள்

www.srivaishnava.org www.ramanuja.org www.prapatti.com www.srivaishnavam.com www.srivaishnava.net www.acharya.org www.saranagathi.org www.ranganatha.org www.ramanujamission.org

உங்கள் வீட்டில் கல்யாணக் கோலம் காணவேண்டுமா?



மெய்யூர் - இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மெய்யாலுமே மெய் சிலிர்த்துப் போகும் காட்சி ஒன்று அங்குக் கிடைக்கும். அது மகான் ராமானுஜர் பிள்ளை உறங்காவில்லிதாசருக்கு அரங்கன் அழகைக் காட்டிஉணர்த்தியது போன்ற அழகுக் காட்சி. பெயருக்கேற்ப மெய்யூர் சௌந்தர்ராஜப் பெருமாள் அழகை கண்ணுறும் ஒவ்வொருவரும் அதைத்தான் சொல்வர்.


சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று, விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றுப் பாலம் கடந்தவுடன் வரும் கிராமச்சாலையில் திரும்பி இரண்டரை கி.மீ. சென்றால் மெய்யூர் கிராமம் வருகிறது.


அழகான சிறிய கிராமத்திலிருக்கும் இந்தப் பெருமானுக்கு ஒரு சிறப்பும் உண்டு. அது, திருமணத்திற்காகக் காத்திருப்போர் இங்கு வந்து சேவித்து, திருக்கல்யாண உற்சவம் செய்ய வேண்டிக்கொண்டால், காரியம் உடனே கைகூடுகிறது. இது பக்தர்கள் பலருடைய அனுபவம்.


13 ஆம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பால் தென்னகத்தில் பல கோயில்களும் நிர்மூலமாயின. அப்போது தென்னாட்டைச் சேர்ந்த கோயில் விக்கிரகங்கள் ஆந்திரம் மற்றும் கர்நாடக தேசத்து திவ்ய தேசங்களைச் சென்றடைந்தபோது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இந்த சுந்தரராஜப் பெருமாள் விக்கிரகமும் இங்கு வந்து சேர்ந்ததாக நம்புகிறார்கள். அப்படி ஆந்திர தேசத்தை நோக்கிச் செல்லும்போது, பாலாற்றைத் தாண்டிச்
செல்ல மனமில்லாமல், வெள்ளத்தில் மறைந்து கொண்டார்களாம்.

 

உடன் வந்த திருவகீந்திரபுரத்து தேவநாதப் பெருமாள், அருகிலுள்ள செட்டிபுண்ணியம் கிரமத்தில் போய்ச் சேர்ந்து கொண்டாராம். வெள்ளம் வடிந்தபிறகு, பாலாற்றில் வெளிப்பட்ட இந்த விக்கிரகங்களை எடுத்துவந்த மெய்யூர் கிராமவாசிகள், ஏற்கனவே இருந்த பல்லவர் காலத்துக் கோயிலில் பிரதிஷ்டை செய்து விட்டார்கள். இந்த சௌந்தர்ராஜப் பெருமாள் சிரிப்பழகில் லயித்துப் போய், "பொன்னிவர் மேனி, மரகதத்தின் பொங்கிளஞ்சோதி அகலத்தாரம்மின்" என்று திருநாகையில் பாடப்படும் பாசுரங்களையே இங்கும் பாடி மகிழ்கிறார்கள்.


கல்யாணம் தட்டிப்போகிறதே என்ற கவலையும் சரி, குழந்தை இல்லையே என்ற குறையும் சரி, இந்த மெய்யூர் சுந்தரராஜனிடம் வந்து வேண்டிக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடுகிறது.


இத்திருக்கோயிலில் மூலவர் சந்நதியில் உபய நாச்சிமார்களோடு சுந்தரராஜப் பெருமாள் சேவை சாதிக்கிறார். பெருமாளின் வசீகரிக்கும் திருமுகம் நம்மை அங்கேயே நின்று அவர் அழகில் ஈடுபடச் செய்துவிடுகிறது. தனி சந்நிதியில் சுந்தரவல்லித் தாயார் சேவை சாதிக்கிறார். உற்சவமூர்த்திகளும் தனியாக ஆழ்வாராசாரியர் விக்கிரக ரூபத்தில் அழகு ஸ்வரூபத்துடன் காட்சியளிக்கிறார்கள். வெளியே தனியாக கருடன் சந்நிதியும் ஆஞ்சநேயர் சன்னிதியும் உள்ளன.


இப்போது திருக்கோயிலுக்கு சம்ப்ரோக்ஷணம் செய்ய உத்தேசித்துள்ளார்கள். திருக்கோயில் பணிகள் நடந்து வருகின்றன. ஆஞ்சநேயருகுக் தனி உற்சவ விக்ரஹம் செய்ய எண்ணியுள்ளனர். இத்திருக்கோயிலில் உள்ள அனைத்து நாச்சிமார்களுக்கும் (8) தங்கத்தில் வெள்ளிச் சரடுடன் (ஒவ்வொரு திருமாங்கல்யமும் ஒரு சவரனில் அமையும்படி) திருமாங்கல்யம் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளனர். ரூ.பத்து லட்சம் செலவில் திருக்கோயில்
பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. உதவும் அன்பர்கள்
MEIYUR SRI SUNDARRAJA SWAMY KAINKARYA SABHA
என்ற பெயருக்கு பொருளுதவி செய்து திருப்பணியில் தோள் கொடுக்கலாம்.

 

தொடர்பு எண் : பாலாஜி, செல்: +91 94440 06963
(99,T.P.Koil street, Tiruvallikkeni, Chennai 600 005)  

Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed & Developed by Alahappa Grafix team.