ஒவ்வொரு சூரிய நாளிலும் சுடச்சுட : Updated Every Sunday
 
படைப்புகளை அனுப்ப...articles@prabandham.com sriram@prabandham.com

கைத்தலம் பற்றும் கல்யாணமேடை  வாரணமாயிரம்

வைணவம் சமயம் தொடர்பான தளங்களின் தொடர்புகள்

www.srivaishnava.org www.ramanuja.org www.prapatti.com www.srivaishnavam.com www.srivaishnava.net www.acharya.org www.saranagathi.org www.ranganatha.org www.ramanujamission.org

அந்த மனிதனும் ஒரு ஆப்பிள் மரமும்

 

தாமல் கண்ணன்


இமயமலையில் ஒரு ஆப்பிள் மரம் வளர்ந்திருந்தது. ஒரு சிறு பையன் அந்த மரத்தடிக்கு தினமும் வருவான். மரத்தின் மேல் ஏறுவான். ஆப்பிளைத் தின்று பசியாறுவான். அதன் நிழலில் குட்டித் தூக்கம் போடுவான். அந்த மரத்தோடு ஆடுவது அவனுக்குப் பிடிக்கும். மரத்திற்கும் அவனைப் பிடிக்கும். பையன் பெரியவனாக வளர்ந்தான். ஒருநாள் சோகமாக மரத்தடிக்கு வந்தான்.


""ஏன் சோகமாக இருக்கிறாய் இளைஞனே! சிறு வயதில் ஆடியது போல் விளையாடு'' மரம் பேசியது.


""நான் சிறுவனல்ல; மரத்தைச் சுற்றி ஆடும் வயதைத் தாண்டிவிட்டேன். பணம் வேண்டும் பொம்மைகள் வாங்க.''


""எனது ஆப்பிளைப் பறித்து விற்று அந்தப் பணத்தில் பொம்மை வாங்கு'' என்றது மரம்.
மொத்த ஆப்பிளையும் பறித்தான். பிறகு நெடுநாள் வரவேயில்லை. மரம் மறுபடி சோகமுற்றது.


பையன் பெரியவனாகிவிட்டான். அப்போது மரத்தடிக்கு வந்தான். "வா விளையாடு' என்றது மரம்.


""எனக்கு குடும்பம் வந்துவிட்டது. ஒரு வீடு வேண்டும். உன்னால் உதவ முடியுமா மரமே'' என்று கேட்டான்.


""கிளைகளை வெட்டி வீடு கட்டிக் கொள்'' என்றது மரம். எல்லா கிளைகளையும் வெட்டினான். மகிழ்ச்சியாக வெளியேறினான். மரத்திற்கு சந்தோஷம். ஆனால் அவன் திரும்பவேயில்லை! அதனால் மரம் மறுபடி சோகமுற்றது.


ஒரு கோடைநாள்... திரும்பவும் வந்தான் கிழவனாக. ""நான் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டும். ஒரு படகு தரமுடியுமா?'' என்று மறுபடி கேட்டான் மரத்திடம்.
""என்னுடைய அடித்தண்டை வெட்டி படகு அமைத்துக்கொள்'' என்றது மரம். அதையும் செய்தான். நிரம்ப வருடங்களுக்கு அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. திரும்ப வந்தான் மரத்திடம்.


""நான் ஆடி ஓய்ந்துவிட்டேன். எனக்குத் தேவை ஓய்வு. இடமெங்கே ஓய்வுபெற?''
""ஓய்வு பெற பழைய மரத்தின் வேர்கள் அருமையான இடம் . என்னுடன் உட்கார். ''
மனிதனும் உட்கார்ந்தான். மரமும் ஆனந்தத்தால் கண்ணீர் விட்டது.


இந்தக் கதையால் பாடமேதும் உண்டா? பையன் மரத்திடம் அதிக உரிமை கொண்டு துன்புறுத்தினான். ஆனால் மரமோ அவனுக்கு உதவிகள் செய்து கொண்டே இருந்தது.
தம்மைக் காக்க, பெற்றோர் கடன் பட்டிருக்கிறார்கள் என்று எண்ணுகிறோம். காலம் கடந்த பின்னர் அழுவதால் ஏதும் பயனுண்டா?


இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும் கதை! தற்போது அமெரிக்கா சென்று டாலர் குவிக்கும் மகன்கள் பெற்றோரை அனாதை இல்லத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள் & நாளை நமக்கும் அதே கதிதான் என்பதை மறந்துவிட்டு!

Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed & Developed by Alahappa Grafix team.