|
திருமண்
காப்பு தரித்தல்
கேசவாய நம என்று நெற்றியிலும்
நாராயணாய நம என்று நாபியிலும்
மாதவாய நம என்று மார்பிலும்
கோவிந்தாய நம என்று நெஞ்சிலும்
விஷ்ணவே நம என்று வலது மார்பிலும்
மதுஸூதனாய நம என்று வலது புயத்திலும்
த்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும்
வாமனாய நம என்று இடது நாபியிலும்
ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும்
ஹ்ருஷீகேசாய நம என்று இடது தோளிலும்
பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும்
தாமோதராய நம என்று பிடரியிலும்
திருமண் தரித்துக் கொள்ள வேண்டும்.
திருமண் காப்பின் சிறப்பு
ஸ்ரீ
கோ.க.வா. அண்ணன் திருவேங்கடாச்சாரியார் ஸ்வாமி
என்று நான்முகன் முதல் யாரும் யாவையும்
நின்ற பேரிருளினை நீக்கி நீணெறி
சென்று மீளாக்குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தை தானுஞ் சாத்தியே
"ஸஹோவாசவ்யாஸ: பராசர்ய:" என்று திருத்தகப்பனாரான பராசர பகவானின் புத்திரர்
என்பதாலே வ்யாஸருக்கு தன்னேற்றம் என்கிறது வேதம்.
அப்படிப்பட்ட பெருமையை உடயவரான பராசர பகவான் வேதத்தின் பூர்வபாக விவரணமாக
பராசர ஸ்ம்ருதியும் - வேதத்தின் உத்தர பாக விவரணமாக ஸ்ரீ விஷ்ணு புராணமும்
அருளிச் செய்து உலகத்திற்கு உபகரித்தருளினார்.
இந்த பராசர ஸ்ம்ருதியையும் - ஸ்ரீ விஷ்ணு புராணத்தியும் பல முனி
புங்கவர்களும் நமது ஆசார்யர்களும் ஆதரித்துப் போந்தார்கள்.
ஸ்ரீமந் நாராயணனே பரதத்வம் என்று நிர்ணயம் செய்தவரான இந்த பராசர பகவானை (ரிஷி)
நமது பரமாசார்யரான ஸ்ரீ ஆளவந்தாரின் திருவுள்ளக் கருத்தை அறிந்திறே ஸ்ரீ
கூரத்தாழ்வாரின் குமாரருக்கு பராசரர் என்று திருநாமம் சாற்றியருளினார்.
அப்படிப்பட்ட பகவான் பராசர மகரிஷி நைமிசாரண்ய க்ஷேத்திரத்திலே
எழுந்தருளியிருக்க மைத்ரேயர் முதலான முனிபுங்கவர்கள், முனிச்ரேஷ்டரான
பராசர பகவானைத் திருவடித் தொழுது "ஸ்வாமிந்! தேவரீர் அடியோங்களுக்கு
வேதத்தின் பூர்வ பாகத்தில் காட்டப்பட்ட சாமான்ய தர்மங்களை முன்பு அருளிச்
செய்தருளிற்று. இனி மோக்ஷ சாதனமான உபாயங்களை அருளிச் செய்ய வேணுமென்று
ப்ரார்த்தித்த அளவிலே:-
பகவான் பராசர முனிவரும் மோக்ஷ ஸாதநத்தை உபதேசித்தருளினார்.
"ஆத்யம்து சங்க சக்ராதி தாரணம் வைஷ்ணவம் ஸ்ம்ருதம்|
புண்ட்ரம் நாம க்ரியாசைவ மந்த்ரச்சைவார்ச்சநம் ஹரே:
ஸம்ஸ்காரா: பஞ்ச கர்த்தவ்யா ப்ராஹ்மணஸ்ய விதாநத:"||
எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு கீழ்வரும் ஸம்ஸ்காரங்களை பின்பற்றியே
ஆகவேண்டும்.
1. எம்பெருமானின் அடையாளமாகிற சங்கசக்ரங்களை தரிப்பது. இதை "தாப
ஸம்ஸ்காரம்" என்று சொல்லுவார்கள்.
2. எம்பெருமானின் திருவடிகள் போல ஊர்த்வ புண்ட்ரத்தை (நெடுக்காக
திருமண்காப்பை) தரிப்பது. இதை புண்ட்ர ஸம்ஸ்காரம் என்று சொல்லுவார்கள்.
3. எம்பெருமானது திருநாமத்தை (பெயரை) அல்லது அவர் அடியார்களான
ஆசார்யர்களின் திருநாமத்தை (பெயரை) அவர்களின் 'தாஸன்' என்று விளங்கும்படி
தாஸ பதத்துடன் சேர்த்துச் சொல்லுவார்கள்.
4. எம்பெருமானுக்கும் நமக்கும் உண்டான உறவை (நவவித ஸம்பந்தத்தை)
உணர்த்தும் மந்த்ரத்தை அநுசந்தித்தல், இதை 'மந்த்ர ஸம்ஸ்காரம்' என்று
சொல்லுவர்கள்.
5. தனது தாஸத்வம் சித்திப்பதற்கு ஸ்ரீமந்நாராயணனை ஆராதித்தல்.. இதை யாக
ஸம்ஸ்காரம் என்று சொல்லுவர்கள்.
இந்த ஐந்து ஸம்ஸ்கரங்களும் வேதம் முதலான சாஸ்திரங்களில் சொல்லுகிறபடி
ப்ராஹ்மணன் தொடங்கி ஸ்த்ரீ சூத்ராதி பஞ்சமர்களளவும் எல்லா ஜீவாத்மாக்களும்
அவசியம் பெற வேண்டிய 'ஸ்ரீவைஷ்ணவ தீட்சையே ஆகும். இந்த தீக்ஷை ஆத்மாவைப்
பற்றியதே தவிர சரீரத்தைப் பற்றியது அல்ல. கர்மாக்களின் அடியாகவே சரீரங்கள்
வேறுபடுகிறதேயொழிய ஆத்மாக்கள் எல்லாம் ஞானத்துக்கும் ஆநந்தத்திற்கும்
இருப்பிடமாய் ஸ்வயம் ப்ரகாசமாய் எம்பெருமானுக்கு பத்நியாய் சேஷமாய்
இருக்கிறது என்பதை வேதம் முதலான சாஸ்திரங்கள் எல்லாம் பரக்க
உத்கோஷிக்கின்றன என்று பராசர பகவானும் அருளிச் செய்தார்.
"தாப: புண்ட்ர ஸ்ததாநாம மந்த்ரோ யாகச்ச பஞ்சம:|
அபீபரம ஸம்ஸ்காரா: பாரமைகாந்த்ய ஹேதவே:||
இப்படிப்பட்ட பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸ்ரீவைஷ்ணவ தீக்ஷை) என்னும் விஷயத்தை
பராசர பகவான் முதலான பல பல ரிஷிகள், ஆசார்யர்கள் பரக்க உபதேசித்துள்ளதில்
அடியேன் புண்ட்ர ஸம்ஸ்காரம் பற்றிய விஷயத்தை இங்குக் கொடுக்கிறேன்.
திருமண்காப்பின் சிறப்பு -
1
"ம்ருத்திகே ஹநமே பாபம் யந்மயா துஷ்க்ருதம் க்ருதம்|
த்வயா ஹதேந பாபேந ஜீவாமி சரதச்சதம்|
ம்ருத்திகே தேஹிமே புஷ்டிம் த்வயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம்|"
என்று கோஷிக்கிறது தைத்ரியோபநிஷத்து. இந்த ச்ருதிக்குப் பொருளாவது:-
ம்ருத் என்கிறது திருமண். அது பூமிதேவியைக் குறிக்கிறது. ஹே! ம்ருத்
ஸ்வரூபியாய் இருக்கிற பூமிதேவியே! என்னால் செய்யப்பட்ட எந்த கெட்ட
காரியமுண்டோ அந்த என்னுடைய பாபத்தைப் போக்குவாயாக! உன்னால் போக்கப்பட்ட
பாபத்தால் பலவாண்டுகள் ஜீவிப்பேனாகவும்! ஹே பூமிதேவியே! எனக்கு புஷ்டியைக்
கொடு. எல்லாம் உன்னிடத்தில் நிலைத்திருக்கிறது. என் பாபங்கள் எல்லாம்
நீங்கி நான் நெடுநாள் வாழ உன்னை நெற்றி முதலான உன்னத ஸ்தானங்களில்
தரிக்கிறேன் - என்பதே!
இதேபோல அதர்வண மஹோபநிஷத் மற்றும் 58 ச்ருதி ஸ்ம்ருதிகளில் இவ்வர்த்தம்
உத்கோஷிக்கப்படுகிறது.
"க்ருஷ்ணா ஸம்பத்கரா நித்யம் ரக்தாரோக்ய ப்ரதாயிநீ|
பீதாஜ்ஞான ப்ரதா ப்ரோக்த்தா ச்வேதா மோக்ஷப்ரதாந்ருணாம்||
ம்ருத்தானது நான்குவகைப்பட்டுக் கிடக்கும். கருப்பு மண்ணை ஐச்வர்யம்
வேண்டுமவர்களும், சிவப்பு மண்ணை ஆரோக்யம் வேண்டுமவர்களும், மஞ்சள் மண்ணை
ஞானம் வேண்டுமவர்களும், வெளுப்பு மண்ணை மோக்ஷம் வேண்டுமவர்களும் தரிக்கக்
கடவர்கள்.
"ப்ரபந்நைர் தார்யதே ச்வேதா விஷ்வக்ஸேநாதி பிர்கணை:|
முமுக்ஷுபி: விசேஷேண ஸநகாத்யை: முமுக்ஷுபி:||
ப்ரபந்நர்களான முமுக்ஷுக்களாலும், நித்ய சூரிகளான விஷ்வக்ஸேநர்
முதலானவர்களாலும், ஸநக ஸநத்குமாராதிகளான முமுக்ஷுக்களாலும் வெள்ளைத்
திருமண் காப்பே தரிக்கப்படுகிறது.
"சதுர்விதாநாம் ம்ருத்ஸ்நாநாம் ச்வேத ம்ருத்ஸநா மஹோத்தமா|" நான்கு வகையான
திருமண்களில் வெள்ளைத் திருமண் காப்பே மிகச் சிறந்தது. பெரியோர்களான
மேலாத் தேவர்களும் நிலத் தேவர்களும் தரிப்பது வெள்ளைத் திருமண் காப்பையே
என்பது ஸ்காந்தம் - பாத்மோத்தரம் முதலானவைகளால் அறியப்படுகிறது.
"ச்வேதாப்ரதாநதோ க்ராஹ்யாதூர்த்வ புண்ட்ரஸ்யதாரணே|
ச்வேத ம்ருத்தி கயா யுக்தோ ஹரிரேவ ந ஸம்சய:||
ஊர்த்வ புண்ட்ரம் அணியும்போது வெள்ளைத் திருமண் முக்கியமாகக் கொள்ளத்
தக்கது. வெள்ளைத் திருமண் காப்போடு கூடியவன் நாராயணனாகவே கருதக் கடவன்.
இதில் சந்தேகமில்லை என்று நாரதீய ஸ்ம்ருதி கூறுகிறது.
திருமண் காப்பின் சிறப்பு -
2
பரத்வ வ்யூக விபவ அந்தர்யாமித்வ அர்ச்சை முதலான நிலைகளிலும் எம்பெருமான்
தன் திருமுகமண்டலத்தில் "குண்டலீக்ருத ஸர்ப்பஸ்த ஹரிபாத த்வயாக்ருதிம்"
என்கிற ப்ரமாணப்படி ச்வேத ம்ருத்திகையாலே படம் விரித்து மண்டலம்
இட்டிருக்கும் ஸர்ப்பத்தின் மேலிருக்கும் ஹரிபாத த்வயாக்ருதியாக ஊர்த்வ
புண்ட்ரம் சாத்திக்கொண்டு இருக்கிறார் என்பது நம் பூர்வர்களின் நிர்வாஹம்.
காவேரீ விரஜாதோயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸவாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்|
விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக:||
என்கின்றன புராண ஸ்லோகங்கள். இவைகளின் கருத்தாவது அந்த விரஜையே இந்த
காவேரீ. வைகுண்டமே ரங்கமந்திரம். அந்த வாஸுதேவனே ரங்கேசன். ஆக இது நம்
கண்ணுக்குத் தோற்றும் பரமபதம்.
ஸ்ரீரங்க விமானம் ப்ரவணத்தின் உருக்கொண்டது மிகவும் வியப்பை உண்டாக்குவது.
வேதங்கள் நான்காகிற நான்கு கலசங்களை உடையது.
கோயிலாகிற ஸ்ரீரங்கமே பரமபதம். இதில்ஸம்சயமில்லை. ஆதலால் அங்கு அப்படி
எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறாரோ அதேபோல்தான் கோயிலிலும் எழுந்தருளி
இருக்கிறார். ஆதலால் பரமபதத்தில் உள்ள இருப்பைப் போல பெரிய பெருமாள்
திருமுக மண்டலத்திலேயும் ஹரிபாதத்வயா க்ருதியாக திருமண்காப்பு இருக்கிறது
என்பது பெரியோர்களின் நிர்வாஹம்.
எம்பெருமான் அர்ச்சாவதாரத்தில் ஊர்த்வ புண்ட்ரம் அணிந்திருப்பதற்கு
காரணத்தை வரதராஜஸ்தவத்தில் கூரத்தாழ்வார் அருளியிருப்பதாவது:
உத்தரத்யுபரி பக்தஜநாஅந் இதி ஊர்த்வதாச்ரயண ஸுசித சக்திம்|
ஊர்த்வ புண்ட்ர திலகம் பஹுமாநாத் கிம் பிபர்ஷி வரத! ஸ்வலலாடே||
ஹே வரதனே! உன்னடியார்களை அர்ச்சிராதி மார்க்கத்தால் பரமபதம் சேர்வதற்கு
உத்தரணம் செய்ய (மேல்கொண்டு செல்ல) வழி வகுக்கிறாது என்பதை
குறிப்பாலுணர்த்தும் சக்தியை உடைய மேல்நோக்கிச் செல்லும் புண்ட்ரத்தை
கௌரவிப்பதற்காக உன்னுடைய நெற்றியில் தரித்திருக்கிறாயா? என்றார்.
எம்பெருமானின் பாதங்கள் இரண்டின் வடிவில் மேல்நோக்கி திருமண் காப்பை
இட்டுக் கொள்ள வேணும் என்றுதானே சாஸ்திரம் கூறுகிறது. அந்த பாதவடிவமான
திருமண் காப்பை எம்பெருமான் திருநெற்றியிலே சாத்தலாமா? என்கிற
கேள்விக்குப் பதிலாக இந்த ச்லோகம் ஆழ்வானால் அருளிச் செய்யப்பட்டது.
தன் பக்தர்களை மேலுலகமான பரமபதத்தை அடைவிக்கிறது என்பதை இந்தத் திருமண்
காப்பு தான் மேல்நோக்கி இடப்படுவதால் தன்னைத் தரித்தவர்களை மேல்நோக்கிச்
செலுத்தும் சக்தியை உடையது என்பதை ஸுசிப்பிக்கிறதாகையாலே ஊர்த்வ புண்ட்ரம்
என வழங்கப் படுகிறது. இவ்விதமான திருமண்காப்பை கௌரவிப்பதற்காக ஹே வரதனே!
நீயும் உன் நெற்றியில் தரிக்கிறாயோ? என்று கேட்கும் விதத்தில் இது
பதிலாகிறது.
திருமண் காப்பை எம்பெருமானும் திருநெற்றியில் அணிகிறதற்கு மற்றுமொரு
ஔசிதமுண்டு. அதேதென்னில் எம்பெருமான் ஆசார்ய கோஷ்டி ப்ரவிஷ்டனாகையாலே,
அதாவது பெரியபெருமாள் தொடங்கி மாமுனிகள் ஈறாக ஓராண்வழி ஆசார்ய
பரம்பரையாகையாலே முதல் ஆசார்யன் பெரியபெருமாள்.
ஆகவே ஆசார்யனாயிருப்பதையிட்டும்
திருமண் காப்பு அணியலாம். மற்றுமொன்று, பத்ரிகாசிரமத்தில் நரன் என்கிற
பெயருடன் எம்பெருமான் சிஷ்யனாய் அவதரித்தான். ராமாவதாரத்தில் வஸிஷ்டனுக்கு
சிஷ்யனானான். க்ருஷ்ணாவதாரத்தில் ஸாந்தீபனீயின் சிஷ்யனானான். அர்ச்சையில்
திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானாரை ஆசாரியனாகக் கொண்டார்.
நம்பெருமாள் மணவாளமாமுனிகளை
ஆசாரியனாகக் கொண்டான். ஆகவே "அஸ்மத் குருப்யோ நம: அஸ்மத் பரம குருப்யோ நம:
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:" என்கிற மூன்றையும் எம்பெருமானும்
அநுஸந்திக்கிறான். அதனால்தான் அவை மூன்றும் வேத பாகங்களில் ஓதப்பட்டன.
எனவே எம்பெருமான் தன் திருநெற்றியில் திருமண்காப்பு அணிந்துகொள்ளக்
குறையில்லை.
இப்படி அன்றிக்கே, பாதாகாரமான திருமண் ஈஸ்வரனுக்குக் கூடாதென்னில் பகவத்
பாத தீர்த்தமான கங்கா தீர்த்தத்தால் பகவத் ஆராதனமும், "பூ:பாதௌ" என்று
ஸ்ரீ பகவத் பாதமான பூமியிலுண்டான பதார்த்தங்களால் ஆராதனமும் கூடாதிரே
லோகத்தில் பாதமெல்லாம் த்யாஜ்யம் என்றும் சிரஸ்(தலை) எல்லாம் உபாதேயம்
என்றும் நியமம் இல்லை ஸ்ரீ பகவத் பாதம் (திருவடி) ஆழ்வார் ஸ்வரூபமாய்,
அப்ராக்ருதமாயிருக்கையாலே திருத்துழாய் ஆழ்வார் ஈச்வர தாஸ பூதராயிருக்க
அவரை எம்பெருமான் திருமுடியிலே சூட்டிக் கொள்கிறாப்போலே!
திரபேக்ஷம் முநிம் சாந்தம் நிர்வைரம் ஸமதர்சனம்|
அநுவ்ரஜாம்யஹம் நித்யம் பூயே யேத்யங்க்ரிரேணுபி:||
என்று பாகவதோத்தமரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவடிப்பொடிகள் எம்பெருமானுக்கு
அத்யந்தம் உத்தேச்யம் ஆகயாலே இந்தத் திருமண்காப்பு அணிந்துகொள்ள
விரோதமில்லை.
ஸ்ரீ சடகோபன் தனக்குத் தானே
எம்பெருமானுடைய திருவடியானவாகாரத்தாலே உத்தேச்யமானாப்போலே,
எம்பெருமானுக்கும் தன் திருவடிகளின் ஆகாரமான திருமண்காப்பு
உத்தேச்யமாகலாம். திருமார்பில் ஸ்ரீவத்ஸத்தோபாதி திருநெற்றியில் தன்
பாதாக்ருதியான திருநாமமும் (திருமண்காப்பும்) நிரூபகமாகத் தட்டில்லை.
நன்றாகப் பார்த்தால் எம்பெருமானுடைய திருவடி சம்பந்தம் பெற்றதெல்லாம்
எம்பெருமானுக்கு உத்தேச்யமாம் அல்லாததெல்லாம் அவனுக்கு அநுத்தேச்யமாம்.
எம்பெருமான் விபவாவதாரத்திலும் ஊர்த்வ புண்ட்ரம் (திருமண்காப்பு)
ஹரிபாதத்வயாக்ருதியாக அணிந்துகொண்டார் என்பதை கம்ப நாட்டாழ்வாரும் தனது
ஸ்ரீ ராமாயணத்திலே அருளிச் செய்தபடி எங்ஙனேயென்னில்,
என்று நான்முகன் முதல் யாரும் யாவையும்
நின்ற பேரிருளினை நீக்கி நீணெறி
சென்று மீளாக்குறி சேரச் சேர்த்திடு
தன்திரு நாமத்தைத் தானுஞ் சாத்தியே |
தேவர்களில் உயர்ந்தவர் நான்முகன் - பிரம்மா அவர் தொடங்கி சேதநாசேதநங்கள்
ஹரிபாதத்வயாக்ருதியாக இருக்கிற ச்வேதம்ருத் என்கிற திருமண் காப்பை
தரித்தால் அது அவர்களை அநித்யமாகிய ப்ரக்ருதி மண்டலத்தை விட்டு திரும்பி
வரமுடியாத்தான, அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியே நித்யமாய் இருக்கிற
மோக்ஷமாகிற பரமபதத்தை அடைவிக்கிறது.
அப்படிப்பட்ட திருமண்காப்பையே
விபவாவதாரமான ஸ்ரீராமாவதாரத்தில் ஸ்ரீராமபிரானும் "தன் திருநாமத்தைத்
தானுஞ் சாத்தியே" என்கிறபடியே ஹரிபாதத்வயாகாரமானதும் மோக்ஷத்தைத்
தருவதுமான ஊர்த்வ புண்ட்ரத்தை (திருமண்காப்பை) தரித்தார் என்பது
புலப்படுகிறது.
சூர்ப்ப-சூல-கூர்மாகாரங்கள் கிடக்க, ஸ்ரீமந் நாராயணனின் திருவடியாகாரம்
என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் திருநெற்றியில் அணிந்து கொள்ளூம் திருமண்காப்புக்கு
ப்ரமாணமாவது:
"மத்யே கர்ணிகயா யுக்த்தம் கிஞ்சித் புல்லாம்புஜாக்குதிம்"
நடுவில் பாம்புவிரல்போல் உள்ளதும், சிறிது மலர்ந்த தாமரை வடிவுடையதும்
என்று பாத்மஸம்ஹிதையில் க்ரியாவாதத்தில் பன்னிரண்டாம் அத்தியாயத்திலும்
"அம்போஜமுகுளாகாரம் பீடம் த்வ்யங்குல ஸம்மிதம்"
இரண்டு விரல் அளவுள்ளதும், தாமரை
மொட்டுப் போன்றதுமான பீடம் என்று வ்யாஸோத்தர ஸ்ம்ருதியில் 4
ஆம்ஸத்தியாயத்திலும் சொல்லப்பட்டது. இது கொஞ்சம் மலர்ந்த தாமரை பூவைபோலே
இருக்கிற பாத பீடம். இத்தை நாமைக தேசத்தாலே பாதமென்றும்...
"நாஸிகா மூலமாரப்ய கேசாந்தம் பாதமாலிகேத்|"
நாஸிகா மூலம் ஆரம்பித்து புருவகேசம் உள்ள இடம் வரை பாதம் இட வேண்டும்
என்றும், ஸ்ரீவைகாநஸத்தில் பார்க்கவ ஸம்ஹிதையில் இருபத்து ஐந்தாம்
அத்தியாயத்திலும் சொல்லப்படுகிறது.
அந்த பாத பீடத்திற்கு அபிமான தேவதையானவர் திருவநந்தாழ்வார் ஆகையாலே,
"பாதபீடாய அநந்தாய நாகராஜாய நம:"
என்று பாத பீட ஆராதனத்திற்கு மந்திரமாகிறது. அந்த பாதபீடத்தின் மேலே
இரண்டு பக்கத்திலும் ப்ரபந்நஜன கூடஸ்தரான ஆழ்வார் ஸ்வரூபமான ஸ்ரீமந்
நாராயணனின் திருவடிகள். இவ்விரண்டிற்கும் நடுவேயிருக்கிற மங்கள
தீபாகாரமான ஸ்ரீசூர்ணம்.
எம்பெருமானுக்கு, "கோயில் கட்டணம் போலே"
என்று சாஸ்திரம் சொல்லிற்று. கோயிலுக்கு தீபமில்லாவிட்டால் சோபியாதிறே.
அதன் நடுவே மங்கள தீபத்திற்கு அபிமான தேவதையான பெரியபிராட்டியார்
ஆகையாலிறே "தீபே ஸ்ரீயம் ஆவாஹயாமி" என்று மங்கள தீப ஆவாஹனம்
திருமண்காப்பின் மத்தியில் இந்த பெரிய பிராட்டியாருடைய மண்டலத்தை
தீபாகாரமாக அணிந்து மத்தியில் இவளை த்யானம் செய்யச் சொல்லுகிற
சாஸ்திரத்திற்கு இன்னுமொரு விசேஷ அபிப்பிராயமுண்டு.
அதாவது வேதாந்தார்த்தமான
எம்பெருமானுக்கு ஸ்வரூப நிரூபகையாய்க் கொண்டு இவள் ப்ரகாசகையாயிருக்கையாலே,
ப்ரகாசித்வமாகிற தீபலக்ஷணம் இவளுக்கு மிகவும் உண்டென்கை. ஆகையிறே
முதலாழ்வார்கள் மூவரிலும் வைத்துக் கொண்டு இரண்டாழ்வார்கள் சூர்யனையும்
ஞானத்தையும் விளக்காக ஏற்ற, பேயாழ்வார் 'திருக்கண்டேன்' என்று
பெரியபிராட்டியாரை விளக்காகக் கொண்டு எம்பெருமானைக் கண்டது.
ஆக இப்படி பாத பீடத்தோடும் மங்கள
தீபிகையோடும் கூடின ஸ்ரீசடகோபாத்மக பகவத் பாதத்வயாகாரமான
திருமண்காப்பாகிற கோயிலுக்குள்ளே எழுந்தருளி இருக்கிறவர் "சதுச்சக்ரம்
நமஸ்யாமி கேசவம் கநகப்ரபம்" (பொன்னி
றமுடையவனும் நான்கு சக்ரங்களை உடையவனுமான கேசவனை வணங்குகின்றேன்) என்றும்,
"கேசவன் தமர்" என்றும் சொல்லுகிற கேசவப் பெருமாள், ஆக இப்படி கேசவப்
பெருமாளுக்குக் கோயிலான இந்தத் திருமண்காப்பு முகத்திலே அணிந்து கொள்ளப்
பட்டதாகையாலே இதெல்லாவற்றுக்கும் ப்ரதானமாய் ஒருக்காலும் விடக்கூடாததாய்
இருக்கும்.
ஆக இப்படி பாதத்துடன் கூடிய ப்ரதானமான
இது தன்னையே நெற்றி, சுவர், தூண், திரை முதலான இடங்களிலே ஒரு திருமணாக
அணிகிற இடங்களிலே அணியப் படவேண்டியது ஆகையாலேயிறே மண்டப கோபுராதிகள்
எல்லாவற்றிலும் இப்படி பழமையான திருமண்காப்புகள் காணப்படுகின்றன. நெற்றி
தவிர உடம்பில் மற்றவிடங்களில் நாராயண புண்ட்ராதிகள் காணப்படவில்லை.
நாஸிகா மூலமாரப்ய கேசாந்தம் தாரயேத்புத:|
விக்ரஹே கோபுரேசாபி மண்டபே மங்களே ததா||
என்னக்கடவதிறே.
மேலும் வைகாநச ப்ருகுப்ரோக்த்த ஸம்ஹிதை - க்ரியாதிகரணம் ஊர்த்வபுண்ட்ர
விதாயகே
- பஞ்சவிம்சேத்யாயத்திலே
"பாதுகேமேததாசைவ சின்ஹமேவம் ஸமாலிகேத்
ஸ்த்ரீணாம்சாபிததாசைவ ஸ்ரீசூர்ணம் ச்வேதம்ருத்திகா|"
என்று பெண்களும் திருமண் ஸ்ரீ சூர்ணம் அவசியம் அணியத்தக்கது என்பதும் "ரக்தவர்ணம்
ஹரித்ரா சூர்ணமுத்தமம்" என்கிறபடி மஞ்சள்பொடி குங்குமப் பூ கலந்து சிவப்பு
நிறமாகவே தரிப்பது உத்தமம் என்று அறியப்படுகிறது.
பாஞ்சராத்ர பாத்மஸம்ஹிதாயம்,
"குண்டலீக்ருத ஸர்ப்பஸ்த ஹரிபாத த்வயா க்ருதிம்|
ஊர்த்வ புண்ட்ரம் லிகேத் ப்ராக்ஞ: ஸபீடம் ஸாந்தராளகம் என்றும்,
"விஷ்ணோஸ் ஸ்திதஸ்ய சரணத்வயா க்ருதிம்" என்றும்,
"நாஸிகாயாஸ்த்வதோ பாகோ நாஸமூலம் ப்ரசக்ஷதே"
நாஸிகா மூலமாரப்ய லலாடாந்தம் ப்ரகல்பயேத்" என்றும்,
"ஸபீட புண்ட்ரஸஹிதா லக்ஷ்மீ சின்ஹ ஸம்ன்வித:" என்றும்,
ஆக ச்வேத ம்ருத்தினால் பாதத்தோடு கூடின ஹரிபாதத்வயத்தையும் அதன் நடுவில்
லக்ஷ்மீ சின்னமான ஸ்ரீ சூர்ணத்தையும் தரிக்க வேணும் என்பது சிஷ்டாசாரமும்
ஆகும் என்பதையும் நம் மனத்திலே கொண்டு, எத்தேசத்திலும், எவ்வேளையிலும்
முகத்திலே திருமண்காப்பு இல்லாமல் இருப்பதில்லை என்று ப்ரதிக்ஞை செய்து
கொள்வோமாக! அதன்படி நடப்போமாக! என்றும் உறுதியுடனே இருந்து முன்னோர்களின்
திருவுள்ளம் உகக்கும்படி இருப்போமாக!
- (அண்ணன் ஸ்வாமியின் 600வது திருநக்ஷத்திர மலரில் வெளியான கட்டுரை) |