ஒவ்வொரு சூரிய நாளிலும் சுடச்சுட : Updated Every Sunday
 
படைப்புகளை அனுப்ப... articles@prabandham.com sriram@prabandham.com

வைணவம் தொடர்பான தளங்களின் தொடர்புகள்

www.srivaishnava.org www.ramanuja.org www.prapatti.com www.srivaishnavam.com www.srivaishnava.net www.acharya.org www.saranagathi.org www.ranganatha.org www.ramanujamission.org

online casinos
free counter

தளத்தை அணுகியவர்கள் எண்ணிக்கை

வைணவப் பத்திரிகைகள்
ஆதிப்பிரான்

ஓம் நமோ நாராயணாய

 

பொலிக பொலிக பூமகள்கோன் தொண்டர்!

 

This site prabandham.com plan is initiated by Sri Nithyanandagiri swamiji of Thabovanam. (My Pranaam to Swamiji)

Please Read with Unicode Encoding


அன்பு நண்பர்களே, நலம் விரும்பிகளே, பிரபந்தம் வாசகர்களே!

ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தபோவனம் ஞானானந்தகிரி ஸ்வாமியின் சிஷ்யர் ஸ்ரீநித்யானந்தகிரி ஸ்வாமி அடியேனிடம் தனிப்பட்ட முறையில் சில கருத்துகளைக் கூறினார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறையடியாரும், ஆன்மிகப் பெண்கவியும், ஞானியுமான செங்கோட்டை ஆவுடையக்காள் பற்றிய நூல் மற்றும் ஒலிநாடா இரண்டு வருடங்களுக்கு (2004இல்) முன் சென்னை நாரத கான சபாவில் வெளியிடப்பட்டது. தபோவனம் ஸ்வாமியும் ஸ்ரீஅண்ணா கிருஷ்ணப்ரேமி ஸ்வாமியும் கலந்துகொண்டனர். அப்போது, அந்த நிகழ்ச்சியை அடியேன் தொகுத்துக் கொடுத்தேன். அப்போதும் தபோவனம் ஸ்வாமி, உலகளாவிய வலைத்தளங்களில் ஹிந்து சமூகத்துக்கு எதிராக திட்டமிட்ட வகையில் செய்யப்படும் அவதூறான விஷயங்களைச் சொல்லி, ''படித்த இளைஞர்களாகிய நீங்கள் வெறுமனே வேலை வேலை என்று மட்டும் பார்க்காமல், சமுதாயப் பொறுப்புணர்வோடு ஏதாவது செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

எத்தனையோ வலைத்தளங்களில் நமது கலாசாரத்தை வெளிப்படுத்தும் நல்ல தகவல்களை வெளிப்படுத்தி, நமது இளைய சமுதாய நண்பர்கள் நல்லதோர் பணியில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது மகிழ்வாக இருக்கிறது. அந்த வகையில் அடியேனுக்கும் ஒரு கடமை உள்ளது. அது - ஒன்றாகச் சிந்திக்கும் மக்களை ஒருங்கிணைக்கும் பணி. எனவே இது உங்களுக்கான கருத்துத் தளமாக எடுத்துக் கொள்ளலாம்.

பிரபந்தம் என்பது - தமிழின் (96 வகை) சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. நமக்குள்ளே ஒரு பந்தத்தை ஏற்படுத்தப் போவதால் இந்தப் பெயர் என்றும் கொள்ளலாம். ஆயினும் பிரபந்தம் என்றால் உடனே பக்தியில் சிறந்த நமது தமிழகத்தில் பன்னிரு ஆழ்வார்கள் பரப்பிய தமிழ் பிரபந்தப் பாசுரங்கள்தான் நம் மனத்தில் தோன்றும்.

இந்த வலைத்தளத்தில் பிரபந்தப் பாசுரங்கள், சைவத் திருமுறைகள், அவற்றின் வாழ்வியல் சங்கதிகள், இன்றைக்கு நமக்கு வழிகாட்டும் தகவல்கள், சமுதாயக் கருத்துகள், தமிழிலக்கியங்கள் காட்டும் நல்ல சங்கதிகள், நமது உண்மை வரலாறு, வாசகர் கட்டுரைகள், அபூர்வமான கோயில்கள் என்று பலவற்றை இடம்பெறச் செய்யும் எண்ணம் உண்டு.

நிச்சயமாக எந்தவிதமான அவதூறுகளையும் மோசமான மொழிகளையும் தாங்கி எந்தக் கட்டுரையும் கருத்தும் இதில் வெளிவராது. அரசியல் இயக்கங்கள் சார்பற்று, எவ்வித கருத்துமோதல்களுக்கும் இடம் கொடுக்காது நல்ல காற்றை மட்டுமே சுவாசிக்கச் செய்ய எண்ணம் கொண்டுள்ளோம்.

ஒரு பத்திரிகையாளனாக, பத்திரிகை ஆசிரியராக பழம்பெருமை வாய்ந்த மஞ்சரி டைஜஸ்ட்டில் பணிபுரியும்போது கடைசி பக்கக் கட்டுரைகளை அப்படித்தான் வடித்தேன். நல்லதை நல்லோர் விரும்பி ஏற்பர் என்பதற்கேற்ப நிறைய நல்ல நெஞ்சங்கள் அடியேனின் கருத்துகளுக்கு ஆதரவளித்து உற்சாகமூட்டினர். (அந்தப் பெரியவர்களுக்கு அடியேனின் சிரம் பணிந்த வணக்கங்கள்). அதே உற்சாகத்தோடு இந்தத் தளத்திலும் நேர்மறையான (பாஸிட்டிவ்வான) விஷயங்களை மட்டுமே முன் வைக்க ஆசை. ஆனாலும் நம் பண்பாட்டை இழுவுபடுத்துவோருக்கு கல்லடி தராது, சொல்லடி தரும் எண்ணமும் உண்டு. காந்தி பிறந்த மண்ணானாலும், காந்தியை நெஞ்சத்தில் வைக்காமல், ரூபாய் நோட்டோடு நெஞ்சில் உரசும் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு திரிபவர்களால் காந்தியையும் அவரின் அஹிம்சைக் கொள்கையையும் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு அஹிம்சை மொழி புரியாது என்பதால் இந்த எண்ணம்.
இது குறித்த உங்களின் அனுபவ யோசனைகளை அடியேனுக்கு அனுப்புங்கள். வலைத்தளம் முழுமை பெறுவது உங்கள் உதவியில் உள்ளது.

உலகத் தமிழர்களுக்காக இவற்றைச் செய்வது முதல் கடமை. பிறகு நம் கலாசாரப் பொக்கிஷங்கள் உலக மக்கள் அனைவர்க்கும் தெரியும்படி செய்ய, ஆங்கிலத்திலும் அதிகம் கொடுக்க வேண்டும்.

தமிழில் unicode format-ல் அனைவரும் படிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. எழுத்துரு (font) பிரச்னை எங்கும் வரக்கூடாது என்று எண்ணுகிறேன்.

உங்கள் கருத்துகளை எதிர்பார்த்து....

ஸ்ரீ.ஸ்ரீராம்
sriram@prabandham.com

 

இனி பிரபந்தம் தளம் பற்றி ...

 

பிரபந்தம்.காம் - தமிழ், ஆங்கிலம் என இருமொழி பயன்பாட்டு இணையத் தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

உலகத் தமிழ்ச் சமுதாயத்தின் பாரம்பரிய பக்தி மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்புத் தளமாகத் திகழும் நோக்குடன் கலியுகாப்தம் 5109 / திருவள்ளுவராண்டு 2038-39 / கொல்லம் வருஷம் 1182-83 ஸர்வஜித் வருஷம் சித்திரைத் திங்கள் முதல் நாளில் (14.04.2007) தொடங்கப்பட்டது.

 

பிரபந்தம் டாட் காம் - பிரபந்த பிரசார பரிஷத்தின் உலகளாவிய தளம்.

 

சமூகம் சார்ந்துதான் சமயம் இருக்கும். பக்தியும் மொழியுமே சமயத்தை நிலைநிறுத்தும்.

 

தொல்காப்பியர் காலம் முன்பிருந்து வந்திருக்கும் உண்மைத் தமிழர் மதமான நம் சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய மண்ணின் பெருமையைப் பறைசாற்றும் தளம் இது.

 

இம்மண்ணிலிருந்துதான் சங்கரரும் ராமானுஜரும் மத்வரும் குருராகவேந்திரரும் பக்தியை உலகு முழுதும் பரவச் செய்தார்கள். இந்த மண் சார்ந்த சமூக அர்ப்பணிப்பு - இத்தளம்.

 

இந்தத் தளத்தில்...

 

# நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுதும் யூனிகோடில் உள்ளது.

 

# தேவைப்படும் பாடல்களை அச்சு மற்றும் பதிவிறக்கம் செய்யலாம்.

 

# பிரபந்தப் பாடல்களுக்கான விளக்கக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும்.

 

# பிரபந்தம் மட்டுமல்லாது தெய்வத்தமிழ்த் திருமுறைகளும் உண்டு.

 

# மாணவர்கள் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல்களும் கட்டுரைகளும் இடம்பெறும்.

 

# பாரத பாரம்பர்யக் கலைகள் குறித்த தெளிவுகள்...

 

# தமிழின் பாரம்பர்யத்தை விளக்கும் அரிய கட்டுரைகள்...

 

# அபூர்வமான ஆலயங்களின் தரிசனம் மற்றும் தகவல்கள்...

 

# ஆன்மிகப் பெரியவர்களின் ஆன்மநேயக் கட்டுரைகள்...

 

# திருமணத்திற்குக் காத்திருப்போருக்கு இலவச பிரபந்த மணபந்தம் - வாரணமாயிரம்

 

# நாட்டுப்பற்றை வளர்க்கும் தேசத்தியாகியரின் வாழ்க்கைச் சம்பவங்கள்...

 

# எழுத்தாளர்கள் வாசகர்கள் பங்கேற்கும் சிந்தனை மேடை!

 

# பாரத சமுதாயத்திற்கான ஒருங்கிணைப்புத் தளம்.

 

# ப்ர பந்தம் = நல்லுறவு; நல்ல பந்தத்தை வளர்க்கும் நாளைய தரிசனம்..

 

# இந்தத் தளத்தில் உள்ள பாடல்களை எல்லோரும் இலவசமாய் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

OHM

 

Ohm Namo Narayanaya

 

Get to know yourself through prabandham.com !

 

prabandham is a weekly bilingual (Tamil & English) e-magazine, owned by Alahappa Grafix, Chennai (India), prabandham occupies a unique place among the hindu tradition and spritual field.

 

From a modest beginning in Chithirai vishu, Sarvajith Tamil Year (April 14, 2007), prabandham has come a long way in its mission to propagate the traditional tamil poems like naalayira divya prabandham, hindu bakthi oriented poems and articles etc., It has at once unique and universal appeal.

 

The writers to the magazines, contribute with a sense of involvement and sense of participation to propagate prabandham and make prabandham.com occupy its unique place. prabandham focuses on the youth as it believes that they are our future citizens contributing to the greatness of our country and to our religion.

 

Regular contests are held for the students and articles for their self improvement are a regular feature. prabandham receives feedbacks from readers worldwide whose comments are received with an open mind! In summary, prabandham is striving to keep the Tamil spirit and nationalist mind, religious thouths among the readers around the world.


Search Engine Optimization and SEO Tools

பிரபந்தம் தேடல்

VAARANAMAAYIRAM

Free Hindu Matrimony

வாரணமாயிரம்

கைத்தலம் பற்றும் கனவில் உள்ளோருக்கான இலவச பதிவு, தகவல் சேவை விரைவில்...

பாரத விடுதலையின் மணிவிழா ஆண்டில்!

 
Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed & Developed by Alahappa Grafix team.