|
தூண்களாகித் தாங்குங்கள்
இந்திய வீரர்களே!
பராக்கிரமப் பிள்ளைகளே -
இந்திய தேசமாய் தீபத்தைத்
தூண்களாகித் தாங்குங்கள்
இருட்டரக்கனைத்
தவிடுபொடியாக்குங்கள்
வருங்காலக் கனவுகளை
வரவு வைத்து
நிகழ்காலத்திற்குப்
புத்தொளி தாருங்கள்
பராக்கிரமப் பிள்ளைகளே!
இந்திய தேசமாம்
தீபத்தைத் தாங்குங்கள்
தூண்களாகி!
பூவின் நிறமாகட்டும் -
உதிரத்தின் நிறம்
சேவகர்களே, எழுந்திருங்கள்!
பதில் தாருங்கள்
எதிரிகளுக்கு!
யுத்தத்தை யுத்தத்தால்
தகர்த்தெறியுங்கள்.
பராக்கிரமப் பிள்ளைகளே
இந்திய தேசமாம்
தீபத்தைத் தூண்களாகித்
தாங்குங்கள்.
பூமியின் நீளமெங்கும்
எழுதுங்கள் வெற்றியை -
அழகாய்.
ஜெயத்தைப் பொறியுங்கள்
சிந்துச் சமவெளியெங்கும் -
பெருமையாய்.
எவ்வழியாயினும்
விரட்டியடியுங்கள் -
பிசாசை!
பராக்கிரமப் பிள்ளைகளே.
தூண்களாகித் தாங்குங்கள் -
நம் இந்திய தேசமாம்
தீபத்தை...
தமிழில்: அனுராதா சூரியநாராயணன்
ஹிந்தி மூலம்: ராமாவதார்
தியாகி |