|
|
சென்னையின் முக்கிய நகர்ப் பகுதியான மிகப் பழைமை வாய்ந்த மயிலாப்பூரில்
வீற்றிருந்து அருள்பாலிக்கும் மயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை
கபாலீச்வரர் திருக்கோயில் தைத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.
இந்த விழாவின் ஒரு பகுதியாக தெப்போற்சவம் இம்மாதம், அதாவது ஜனவரி மாதம்
22,23,24 தேதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்தக் காட்சி ஆன்மிக அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எத்தனையோ
ஆண்டுகளுக்குப் பின் தெப்பக் குளத்தில் நீர் நிரம்பிய பிறகு இந்த தெப்போற்சவம்
கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் சிறப்பாக நடைபெற்றது. இதிலிருந்து சில காட்சிகள்....
இந்தப் படங்கள் 23.01.08 இரவு 8.30க்கு எடுக்கப்பட்டவை....









Photo by senkottai sriram, Mylapore Tank at 8.30 PM on 23rd Jan.
2008 |