|
03/06/2007 - வைகாசி
20
பஞ்சாங்கம்
பார்க்கலாமா...?
பஞ்சாங்க முறை..
யோகங்கள்-27:
விஷ்வகம்பம், பிரீதி,
ஆயுஷ்மான், சௌபாக்கியம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், துருதி,
சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகாதம், ஹர்ஷணம், வஜ்ஜிரம்,
சித்தி, வியதீபாதம், வரீயான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம்,
சுபம், சுப்பிரம், பிராம்மம், மாகேந்திரம், வைதிருதி
முக்கியமாக கிழமை மற்றும் நட்சத்திர சேர்க்கையால் யோகம்
அறியப்படுகிறது. நட்சத்திரம் மாறும்போது யோகம் மாறிவிட
வாய்ப்புள்ளது.
கரணம்-11:
பலம், பாலவம், கௌலவம், தைதுலம்,
கரசை, வணசை, சகுனி, பத்திரை, சுதுஷ்பாதம், நாகவம்,
கிம்ஸ்துக்கினம்.
இதுவரை கிழமை, திதி, மாதம், யோகம் கரணம் ஆகியன குறித்து அறிந்தோம்.
இவற்றையெல்லாம் பெயரிட்டு வகைப்படுத்தி - அதில் உள்ள
நுணுக்கங்களையெல்லாம் ஆய்து அறிந்து புலப்படுத்தி வைத்துள்ளனர்
நம் முன்னோர்கள்.
எப்படி பூஜை, மந்திரம் போன்றவை ஒரு வேலையாகப் பார்க்கப்பட்டு அது
எல்லோருக்கும் உடையது என்ற எண்ணம் இல்லாமல் பேசப்படுகிறதோ..
அதுபோலத்தான் பஞ்சாங்கம் குறித்த விஷயம் உள்ளது.
ஆனால், காலை எழுந்தவுடன் ஒருவன் ஒரு நாளின் பஞ்சாங்க விஷயங்களை
அறிகிறான் அவன் அன்று அந்த ஒரு செயலுக்கான புண்ணியத்தை அடைகிறான்
என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்.
சுய உணர்வு என்பது தான் இது!
இன்று மிக அத்தியாவசியமான நாள், கிழமை, தேதி, வருடம் கூட நமக்கு
மறந்து போகிறது.. இதனால் நமக்கு நஷ்டமில்லையா? என்றால் நஷ்டம்
தான்..
(தொடருவோம்) |