|
03/06/2007 - வைகாசி
20
மாவட்டந்தோறும் பஜன் மேளா..
நமது ஊர்களில் தெருவுக்கு ஒரு பஜனை கோவில் இருக்கிறது.
அவற்றில் சிலமணி நேரமாவது பகவான் நாமாவைப் பாடுவதும், விசேஷ
நாட்களில் நாள்பூராவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதும் என சேவை
சாதித்து வருகிறார்கள்.
சில பஜனைக் குழுக்கள் செயல்படாமலும் இருக்கின்றன.
இவற்றையெல்லாம் சென்று பார்த்து, பஜனை பாடக்கூடியவர்கள், பஜனைக்
குழுக்கள் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு மாவட்டந்தோறும் பெரிய
அளவில் பஜன் மேளா நடத்தவேண்டும்.
இந்தத் தெய்வீகத் திருப்பணிக்கு நேரம் கொடுத்து தொடர்ந்து
செயலாற்ற முன்வர ஆர்வமுள்ளவர்கள் தர்ம சக்தி இதழுக்கு எழுதுங்கள்.
குறைந்தது மூன்று மாதம் வேலை செய்ய வேண்டி இருக்கும்.
|