|
26/05/2007 - வைகாசி
12
பஞ்சாங்கம் பார்க்கலாமா..?
பஞ்சாங்கத்தில் நாழிகை கணக்கிட்டிருப்பார்கள். ஒரு நாளைக்கு 60
நாழிகை. (பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை) 60 வினாடி கொண்டது ஒரு
நாழிகை, 2 1/2 நாழிகை கொண்டது 1 மணி நேரம்.
அதாவது ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள். நாழிகையை மணியாக மாற்ற
நாழிகையை 2 1/2-ஆல் வகுக்க வேண்டும்.
சூரிய உதயத்திலிருந்தே இந்துக்கள் நேரம் துவங்கும். கடிகார
ஓட்டத்திற்கல்ல நாள், சூரியனின் உதயத்திலிருந்து தான் நாள்
துவங்குகிறது.
அதனால் சூரிய உதய நேரத்தைக் கூட்டிக்கொண்டால் சரியான நேரத்தைக்
கணக்கில் கொள்ள முடியும். எவ்வளவு மணி வரை நக்ஷத்திரம், திதி
இருக்கிறது என்பது தெரிந்துகொள்ளலாம்.
பஞ்சாங்க முறையில் உள்ள விஷயங்களை நமது குழந்தைகளுக்குச் சொல்லித்
தரவேண்டும்.
கிழமைகள்-7 : ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி,
சனி.
சங்கல்பம் செய்யும் போது கிழமையை பானுவாஸரம், இந்து வாஸரம்,
பௌமவாஸரம், சௌமியவாஸரம், குருவாஸரம், ப்ருகுவாஸரம், ஸ்திரவாஸரம்
என்று சொல்வார்கள்.
திதிகள் - 15 : பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி,
சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி,
சதுர்த்தசி, பௌர்ணமி (அல்லது) அமாவாசை.
பௌர்ணமியைத் தொடர்ந்து வருவது க்ருஷ்ண பக்ஷ திதி, அமாவாசையைத்
தொடர்ந்து வருவது சுக்லபக்ஷ திதி என 30 திதி தினங்களைக்
கணக்கிடுகிறார்கள்.
நட்சத்திரம் - 27 : அசுவினி, பரணி, கிருத்திகை, ரோகிணி,
மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்,
பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம்,
கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம்,
பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.
ராசிகள் - 12 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி,
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.
இந்த 12 ராசிகளுக்குள் 27 நக்ஷத்திரங்கள் அடக்கம்.
இதனைக்கொண்டே ராசி பலன்
வெளியிடப்படுகிறது. ராசி பலன் என்பது பொதுவான கருத்து. பொதுவான
பலன்கள் & தனிப்பட்ட மனிதரின் பிறந்த நேரத்தைப் பொறுத்து பலன்
கூடும், குறையும் இதனால் ராசிக்குரிய பலன் கண்டிப்பாக அப்படியே
என்று எடுத்துக்கொள்வது சரியாகாது!
தமிழ் மாதங்கள் - 12: சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி,
புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி.
சங்கல்பம் செய்யும்போது : சைத்ரம், வைசாகம், ஜேஷ்டம், ஆஷாடம்,
ச்ராவணம், பாத்ரபதம், ஆஸ்வினம், கார்த்திகம், அக்ரஹாயனம்,
மார்கசிரம், புஷ்யம், பால்குணம் என்பார்கள்.
(தொடருவோம்) |