|
26/05/2007 - வைகாசி
12
பகவானை எப்படி
அடையலாம்
சக்ரவர்த்தி பரீக்ஷித் தகுதி வாய்ந்தவரான சுகதேவ கோஸ்வாமியிடம் "கேட்பதன்'
மூலமாகவே ஆன்மீக நிலையை அடைந்தார்.
சுகதேவ கோஸ்வாமி அதே நிலையை, தனது தந்தையான வியாசதேவரிடம்
கேட்டறிந்து உன்னத விஷயத்தைச் "சொல்வதன்' மூலமாகவே அடைந்தார்.
மிகச் சிறந்த அறிஞரும் பக்தருமான நாரத முனிவர் சொற்படி, பிரபுவை
"நினைப்பதன்' மூலமாகவே வெற்றி அடைந்தார் பக்த பிரகலாதன்.
செல்வத் திருமகளான லக்ஷ்மி அமர்ந்து நாராயணன் காலைப் பிடித்துப்
"பாதசேவை' செய்வதாலேயே அவரின் அன்புக்குப் பாத்திரமானாள்.
மகாராஜா ப்ரிது "வழிபடுவதன்' மூலமாகவே வெற்றி கண்டான்.
ரத சாரதியான அக்ரூரர் "பிரார்த்தனை' செய்வதன் மூலம் இறைவனின்
அருளைப் பெற்றார்.
மகாவீரனான அனுமன், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் கட்டளையை ஏற்றுப்
"பணிந்து' நிறைவேற்றுவதன் மூலமாகவே முக்தி அடைந்தார்.
தன்னையும் பிறரையும் விவேகியாக மாற்ற பகவத் கீதை உபதேசம் செய்த
கிருஷ்ணபரமாத்மாவுடன் "நட்பு' கொண்டதன் மூலமாகவே உயர்ந்தான்
அர்ஜுனன்.
எல்லாவற்றையும்விட உடலைக்கூட "சமர்ப்பணம்' செய்து உய்வடைந்தார்
சக்ரவர்த்தி பலி.
இந்த ஒன்பதுமே பக்திமய சேவையின் பல்வேறு வழிகள் ஆகும்.
பூரணத்துக்குச் செய்யப்படும் சேவைகள் யாவுமே பூரணமானவையே!
- சுவாமி பிரபுபாதா
|