|
19/05/2007 - வைகாசி 5
ஸ்ரீராம
நவமி
ஸ்ரீ ராமரின் அவதார தினமான ஸ்ரீராம நவமியைக் கொண்டாடும்
போது.. மக்களை இணைக்க..
ராமாயணம் சொற்பொழிவு, கவியரங்கம், பட்டிமன்றம், இசையரங்கம்
போன்றவைகளும்..
மாணவர்களுக்கு ராமரின் குணங்களைப் பற்றிய பேச்சுப்போட்டி, கவிதைப்
போட்டி நடத்தியும், ராமாயணக் கதாபாத்திரங்களில்
உடையலங்காரப்போட்டி நடத்தியும்..
கிராமியக் கலைகளான பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, பொய்க்கால்
குதிரையாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம், மயிலாட்டம்,
ஒயிலாட்டம், தப்பாட்டம், மேடை நாடகங்கள், தெரு நாடகங்கள்,
நையாண்டி மேளம், செண்டை மேளம், தோல் கால் கட்டை நடனம் போன்ற
பாரம்பரியமிக்க கலைகளை இணைக்க வேண்டும்.
மக்களையும் கலையையும் இணைக்கும் மாபெரும் விழாவாக & மக்கள்
விழாவாக ஸ்ரீராம நவமி கொண்டாட இப்போதிலிருந்தே திட்டமிடுவோம்.
ஸ்ரீ ராமரின் சிந்தனை செய்ய செய்ய மக்கள் ஸ்ரீ ராமரின் குணங்களால்
கவரப்படுவர்.
ஸ்ரீ ராமர் தர்மத்தின் உருவம். மஹாவிஷ்ணு மனிதனாக அவதாரம் எடுத்து
தர்மத்தின்படி வாழ்ந்து காட்டிய வடிவம்.
ஒரு மனிதன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலட்சிய
வடிவமே ஸ்ரீராமன்.
இந்த நாட்டை, நாட்டு மக்களை ஒருங்கிணைப்பவன் ஸ்ரீ ராமன்.
அவனது அவதார தினமான ஸ்ரீராம நவமியை எப்படி எல்லாம் மக்கள்
கொண்டாடுகிறார்கள். எங்கெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பதையெல்லாம்
தர்ம சக்தி வரும் இதழ்களில் விரிவாக வெளியிட இருக்கிறது.
நீங்களும் விவரம் அளிக்க வேண்டுகிறோம்.
|