|
19/05/2007 - வைகாசி 5
பூரணமாக
அருள்பவன்
வாகீசாத்யாஸ் & ஸுமநஸஸ் &
ஸர்வார்த்தாநாம் உபக்ரமே
யம் நத்வா க்ருதக்ருத்யாஸ்யு : தம் நமாமி கஜாநநம்
"கஜானன' என்று முடிந்ததால், ச்லோகம் பிள்ளையாரைப் பற்றியது என்று
எல்லாருக்கும் புரிந்திருக்கும்.
அவரைப் பற்றி இங்கே என்ன சொல்லியிருக்கிறது?
ப்ரம்மாதி தேவர்களும் கூட எந்தக் கார்யத்தின் ஆரம்பத்திலும் எவரை
நமஸ்கரித்தே எடுத்த கார்யத்தை முடித்தவர்களாகிறார்களோ அந்த
கஜானனரை & யானை முகரை & நானும் நமஸ்காரம் பண்ணுகிறேன்'' என்று
சொல்லியிருக்கிறது.
'அல்ப சக்தர்களாக உள்ள மனிதர்கள்தான் என்றில்லை, நிரம்ப சக்தி
படைத்த தேவர்களும்கூடப் பிள்ளையாரை வணங்குகிறார்கள்.
எப்போதாவது, முக்கியமான சமயங்களில், பிள்ளையார் சதுர்த்தி
மாதிரியான தினங்களில் தான் வணங்குகிறார்கள் என்றில்லை..
எப்போது பார்த்தாலும், எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும்
வணங்குகிறார்கள்' என்று சுலோகம் தெரிவிக்கிறது.
அது மட்டுமல்லை, வணங்கியதன் பயனைப் பூர்ணமாகப்
பெற்றுவிடுகிறார்களென்றும் தெரிவித்து விடுகிறது.
அவர்கள் நமஸ்காரம் பண்ணினார்கள், இவர் அதை வெறுமனே
வாங்கிக்கொண்டார் என்று முடிந்துபோகவில்லை. அவர்கள் எந்தக்
கார்யத்தின் ஆரம்பத்திலே அவரை நமஸ்காரம் பண்ணினார்களோ அந்தக்
கார்யத்தைப் பலிதமாக்கி, நிறைவேற்றிக் கொடுத்துவிடுகிறார்.
அவர்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்தவர்களாக
ஆக்கிவிடுகிறார்.
- ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள்
- நாமும் அந்த யானைமுகனை வணங்கி வெற்றி பெறுவோம் ..
|