ஒவ்வொரு சூரிய நாளிலும் சுடச்சுட : Updated Every Sunday
 
படைப்புகளை அனுப்ப... articles@prabandham.com sriram@prabandham.com

வைணவம் தொடர்பான தளங்களின் தொடர்புகள்

www.srivaishnava.org www.ramanuja.org www.prapatti.com www.srivaishnavam.com www.srivaishnava.net www.acharya.org www.saranagathi.org www.ranganatha.org www.ramanujamission.org

தளத்தை அணுகியவர்கள் எண்ணிக்கை

வைணவ & ஆன்மிகப் பத்திரிகைகள்

ஆதிப்பிரான்

தர்மசக்தி

கோபுர தரிசனம்

ஸ்ரீதேவி தரிசனம்

பசுத்தாய்

வருகையாளர் பதிவேடு

GUEST BOOK

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும்  பதிவுசெய்யலாம்

19/05/2007 - வைகாசி 5

பஞ்சாங்கம் பார்க்கலாமா?

பஞ்சாங்கமா? நாள்காட்டியா?
உலகில் எவருமே காலத்தின் கணக்கை அறுதியிட்டு வைத்திட ஒரு கணக்கை வைத்துள்ளார்கள்.


ஆங்கிலக் காலண்டர் வரலாறு சில நூற்றாண்டுகளுக்குள் & பல குளறுபடிகளோடு உள்ளது.


மாதங்களின் பெயர்களாகட்டும், நாட்களின் எண்ணிக்கை முதலானவை & தெளிவில்லாதவை & அர்த்தமற்றவை..
வருடப் பிறப்பு ஜனவரி 1 என்பது எதன் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது?


கிறிஸ்து பிறப்புக்கு முன், பின் (கி.மு., கி.பி.) எனப் பிரித்துச் சொல்வது கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில்தானே தவிர, சரியான கணிப்பாகக் கொள்ள முடியாது..


ஏனெனில் கிறிஸ்து பிறப்பை வைத்து ஆண்டு ஆரம்பித்தது என்றால் டிசம்பர் 25&கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பல மாற்றத்திற்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் யூதர்களின் நாட்காட்டியை மையமாகக் கொண்டே இது ஏற்பட்டது என்றும் சொல்வதற்கில்லை..


சரி, இவையெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் அலசும் விஷயம்..
ஆனால், நமது பஞ்சாங்க முறை பற்றிய அறிவை நாம் பெற்றிருக்கிறோமா?.. பின்பற்றுகிறோமா?..
ஆமாம். பின்பற்றுகிறோம். ஆனால் விவரம் தெரியாமல். வெள்ளைக்கார கிறிஸ்துவன் போன பாதையில் அரசாங்கம் செல்வதால் சம்பளத் தேதி & ஆங்கிலத் தேதியைக் கணக்கிடுகிறார்கள்.


நமது சமூக சுப, அசுப காரியங்கள் எல்லாம் நமது பஞ்சாங்க முறைகளைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. கொண்டாடப்படுகின்றன. அதுவரையில் ஆறுதல்..
நாள்காட்டி என்பது ஒரு நாளைக்கு ஓர் எண்ணைக் குறியீடாகக் குறிப்பது & கிழமை இவை மட்டும் உள்ளது.
பஞ்சாங்கம் என்பது ஒரு நாளின் முக்கிய ஐந்து விஷயங்களின் நிலைகளைக் கொண்டு கணிப்பது.


நாள்காட்டியில் லீப் வருடமா? இல்லையா? என்பதை நான்கால் வகுத்து மீதி வருமா? வராதா என்று பார்த்தால் போதும்..
பஞ்சாங்கம் காலக்கணக்கில் பல வானவியல் & அறிவியல் பூர்வமானவற்றை ஆராய்ந்து கணிக்கப்படுகிறது. அதனால் ஒரே மாதிரி இல்லாமல் பல மாறுதல் இருக்கும்.


ஒவ்வொரு நாளிலும் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களைக் காட்டுவதே பஞ்சாங்கம்.
திதி : பிரதமை முதலான 15 திதிகள். வாரம்: ஞாயிறு முதலான 7 கிழமைகள், நட்சத்திரம் : அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்கள்,


யோகம் : விஷ்கம்பம் முதலான 27 யோகங்கள், கரணம் : பவம் முதலான 11 கரணங்கள்.


(தொடருவோம்)


Search Engine Optimization and SEO Tools

பிரபந்தம் தேடல்

VAARANAMAAYIRAM

Free Hindu Matrimony

வாரணமாயிரம்

கைத்தலம் பற்றும் கனவில் உள்ளோருக்கான இலவச பதிவு, தகவல் சேவை விரைவில்...

பாரத விடுதலையின் மணிவிழா ஆண்டில்!

புத்தகங்களுக்கான தேடல்

தமிழ் நூல்கள்

 
Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed & Developed by Alahappa Grafix team.