ஒவ்வொரு சூரிய நாளிலும் சுடச்சுட : Updated Every Sunday
 
படைப்புகளை அனுப்ப... articles@prabandham.com sriram@prabandham.com

வைணவம் தொடர்பான தளங்களின் தொடர்புகள்

www.srivaishnava.org www.ramanuja.org www.prapatti.com www.srivaishnavam.com www.srivaishnava.net www.acharya.org www.saranagathi.org www.ranganatha.org www.ramanujamission.org

தளத்தை அணுகியவர்கள் எண்ணிக்கை

வைணவ & ஆன்மிகப் பத்திரிகைகள்

ஆதிப்பிரான்

தர்மசக்தி

கோபுர தரிசனம்

ஸ்ரீதேவி தரிசனம்

பசுத்தாய்

வருகையாளர் பதிவேடு

GUEST BOOK

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும்  பதிவுசெய்யலாம்

19/05/2007 - வைகாசி 5

மனிதன் & மனம் என்ன சொல்கிறது..?
 

யோக விஞ்ஞானத்தில் மனிதனுக்கு ஐந்து உரைகள் & அடுக்குகள் உண்டு என்று கருதப்படுகிறது.
அவை..
* அன்னமய கோஷம் * மனோமய கோஷம்
* ப்ராணமய கோஷம் * விஞ்ஞானமய கோஷம்
* ஆனந்தமய கோஷம்
இவற்றில் " அன்னமய கோஷம் & உணவினாலானது. ஸ்தூலமானது & கண்ணுக்குத் தெரிவது.
மற்ற நான்கும் சூக்ஷ்மமானவை. கண்ணுக்கு நேர் எதிரே தெரியாவிட்டாலும் & உணர்வுகளால், அறிவால் உணர்ந்து கொள்ளக் கூடியது.


மனம் என்பது என்ன?


மல்லிகைப் பூவின் வாசம் மூக்கைத் துளைக்கிறது என்று சொன்னால் புரிகிறது.
மல்லிகைப் பூவை உரசி வரும் காற்று அதன் வாசத்தை ஏந்தி வருகிறது என்று அர்த்தம்.
அந்தக் காற்று மூக்கின் நுகர் நரம்பு மொட்டுகளைத் தொடுகிறது என்று அர்த்தம்.
அம்மொட்டுகள் நாசி(மூக்கின்) நரம்பு மூலம் இந்த அனுபவத்தை மூளைக்கு அனுப்பி வைக்கிறது என்று அர்த்தம்.
மூளை முந்தைய அனுபவங்களின் பெட்டகத்துடன் ஒப்பிட்டு இதை மல்லிகையின் வாசம் என அறிகிறது என்று அர்த்தம்.


இதில் சம்பந்தப்பட்ட (மல்லிகை) மலர், காற்று, மூக்கு, நுகர் நரம்பு மொட்டுகள், நாசி நரம்பு, மூளை என்று அனைத்தையும் அலசி, ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.
நுகர்தல் என்ற இந்தச் செயல் எல்லா இடங்களிலும், காலங்களிலும், உலகிலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஒரே மாதிரி இருக்கும்.


மலரில் வாசமில்லை என்றாலோ, காற்று வீசவில்லை என்றாலோ, சளியின் காரணமாக மூக்கு அடைத்துள்ளது என்றாலோ, நோய் அல்லது வயதின் காரணமாக நாசி நரம்பு செயலிழந்துவிட்டது என்றாலோ மட்டும்தான் ஒருவருக்கு இவ்வனுபவம் மாறுபடும்.
ஆனால், "மல்லிகையின் வாசனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது' என்று ஒருவர் சொன்னால் அதன் அர்த்தம் என்ன?


"பிடிக்கும்' என்ற அந்த செயலைச் செய்யும் கருவி எது?
பிடித்திருக்க & அந்த மல்லிகை மலர்தான் காரணமா? என்றால் மல்லிகையின் மனம் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும்.
ஒருவருக்குப் பிடித்திருப்பது மற்றவருக்குப் பிடிப்பதில்லையே! நேற்று பிடிக்காமல் இருந்து இன்று பிடிக்க வாய்ப்பு உண்டு. இன்று பிடிப்பது நாளை பிடிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு.
"பிடிக்கும்' என்பது நபருக்கு நபர் மாறுபடுகிறது. காலம் மற்றும் இடத்திற்கு ஏற்ப மாறுகிறது.


சந்தையில் எத்தனை வகையான வாசனைகள் உள்ளன பாருங்கள். ஒவ்வொன்றையும் விரும்பி வாங்கவும் ஆள் உண்டு. இது நன்றாக இல்லை என்று சொல்லவும் ஆள் உண்டு!
நிறங்களிலும் இதே போல்தான். கண்களில் உள்ள 25 கோடி செல்களில் ஒன்றரை கோடி கூம்பு வடிவ செல்கள் நிறங்களை அடையாளம் காண உதவுபவை.


ஒரு பொருளிலிருந்து வரும் நிற ஒளிக்கதிரை இவ்வகை செல்களே மூளைக்கு அனுப்பி வைக்கின்றன. தான் சேகரித்து வைத்துள்ள நினைவுப் பெட்டகத்தோடு ஒப்பிட்டு மூளை அந்நிறத்தை அடையாளம் காண்கிறது. காணுதல் அனுபவம் எல்லோருக்கும் பொதுவானது. அந்தக் காட்சி அல்லது நிறம் பிடித்துள்ளதா என்றால் பதில் & நபருக்கு நபர் வேறுபடும்.
ருசிகளிலும் அப்படியே..
ஓசைகளிலும் அப்படி..


ஒருவருக்கு தேவ அமிர்தமாக இருப்பது & மற்றவருக்கு விஷமாக இருக்கிறது..
ஏன்?


மனம் தான் இதற்குக் காரணம். மனம் தான் விரும்புகிறது, மனம்தான் வெறுக்கிறது. பிடிப்பதும் மனதிற்கே, பிடிக்காததும் மனதிற்கே. மனம் மனிதனின் பதினொன்றாவது கருவி என்கிறது யோகம்..
அப்படியென்றால், மனம் என்றால் என்ன?


ராம் கோபாலரத்னம்


Search Engine Optimization and SEO Tools

பிரபந்தம் தேடல்

VAARANAMAAYIRAM

Free Hindu Matrimony

வாரணமாயிரம்

கைத்தலம் பற்றும் கனவில் உள்ளோருக்கான இலவச பதிவு, தகவல் சேவை விரைவில்...

பாரத விடுதலையின் மணிவிழா ஆண்டில்!

புத்தகங்களுக்கான தேடல்

தமிழ் நூல்கள்

 
Disclaimer Feedback Contact Us Home

This Unicode Tamil encoding site is optimised for 800x600 pixels. Best viewed with Internet Explorer 5.5 and above *  A Web magazine from Prabandha Prachara Parishad, owned by Alahappa Grafix / Designed & Developed by Alahappa Grafix team.